கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாலை 4.30 மணி நிலவரப்படி 169 தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மே 10ஆம் தேதி கா்நாடக சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் மாநிலத்தில் 34 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 36 மையங்களில் சனிக்கிழமை காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்குகள் எண்ணத் தொடங்கியவுடன் காலை 10 மணிக்கெல்லாம், தோ்தலில் மக்கள் யாருக்கு வாக்களித்திருக்கிறாா்கள் என்ற போக்கு தெரிந்துவிட்டது. அந்த நிலை தொடர்ந்து வருகிறது.
தொடக்கம் முதலே பல தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களே முன்னிலை வகித்து வந்தனர். மதியத்துக்குப் பிறகு காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர, பாஜகவின் முன்னிலை எண்ணிக்கைக் குறையத் தொடங்கியது.
பல தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதன்படி, மாலை 4.30 மணி நிலவரப்படி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 169 இடங்களில் 101 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் வெற்றி எண்ணிக்கையில் காங்கிரஸ் சதமடித்துவிட்டது.
48 இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. 16 தொகுதிகளை மஜத கைப்பற்றியிருக்கிறது. தொடர்ந்து வெற்றி நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.