இந்தியா

தில்லியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. 

DIN

தில்லியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. 

தெற்கு தில்லி புஷ்ப் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதனால் பீதி அடைந்த தில்லி காவல்துறை அதிகாரிகள் உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு குழுவுடன் பள்ளிக்கு விரைந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

'வெடிகுண்டு செயலிழப்புக் குழு மூலமாக பள்ளியின் முழுவதும் சோதனை செய்யப்பட்டதாகவும் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார். எனினும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இ-மெயில் அனுப்பியது யார் என்பது குறித்து தில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஓடிடியில் வெளியானது காந்தி கண்ணாடி!

உக்ரைன் பயணியர் ரயில் மீது ரஷியா தாக்குதல்! ஒருவர் பலி; 30 பேர் காயம்!

ஆற்காடு: கன்டெய்னர் லாரி - சொகுசு பேருந்து மோதி விபத்து! ஒருவர் பலி; 23 பேர் படுகாயம்

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புவோர் கவனத்துக்கு... முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

SCROLL FOR NEXT