இந்தியாவின் தலைமைத் தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா இன்று (நவம்பர் 6) பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹீராலால் சமாரியாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஹீராலால் சமாரியா மத்திய உரம் மற்றும் வேதிப்பொருட்கள் துறையின் இணைச் செயலாளராகவும், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இதையும் படிக்க: ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு தலைமை நீதிபதி அதிருப்தி
2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள முதல் தலித் நபர் என்ற பெருமையை ஹீராலால் சமாரியா பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு இப்பதவியில் இருந்த ஒய்.கே.சின்ஹாவின் பதவிக்காலம் அக்டோபர் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒரு மாத காலமாக இப்பதவி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.