முகப்பு
இந்தியா

தாக்கப்பட்ட பா.ஜ.க தலைவர் : ரூ.60,000 கொள்ளை!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க தலைவரைத் தாக்கி அவரிடமிருந்து ரூ.60,000த்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Updated On : 9 நவம்பர், 2023 at 1:19 PM
பகிர்:

ஹிமாச்சலப் பிரதேசம், உனாவில் பா.ஜ.க தலைவர் லாக்பிர் சிங் லக்கி தாக்கப்பட்டு அவரிடமிருந்து 60000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உனா மாவட்டம் ஹரோலி பகுதியில் அரங்கேறிய இந்த கொள்ளையடிப்புச் சம்பவம் துப்பாக்கிமுனையில் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சம்பவத்திற்குப்பின் அங்கு கூடிய அப்பகுதி மக்கள் லாக்பிர் சிங்கை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்த விசாரணையைத் துவங்கியிருப்பதாக  துணைக் கண்காணிப்பு ஆய்வாளர் மோகன் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம், கடந்த புதன் கிழமை மாலை நடைபெற்றுள்ளதாகக் காவல்துறை கூறியுள்ளது. லாக்பிர் சிங், அன்று தஹ்லிவால் தொழிற்சாலைப் பகுதியிலிருந்து, கோன்ட்பூர் ஜைசந்த்திலுள்ள தன் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போது, வேறொரு வாகனம் அவரை முந்திச்சென்று அவர் வண்டியின் மீது மோதியுள்ளது.

Advertisement

உடனே வண்டியை நிறுத்தி யாருக்கும் அடிபட்டுவிட்டதா என அவர் பார்க்க முற்பட்டபோது, இடித்த வண்டியிலிருந்து வாள் மற்றும் இரும்புக்கம்பிகளுடன் வெளியே வந்த கும்பல், அவரைத் தாக்கி பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க தலைவர் படுகாயம் அடைந்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் உனாவில் சட்டம் ஒழுங்கு சரிவர பாதுகாக்கப்படவில்லை என உனா பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சட் பல் சட்டி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.