இந்தியா

கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது : 40 பேர் சிக்கிக்கொண்டனர்!

DIN

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வேலை செய்துகொண்டிருந்த 40 பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கிகொண்டனர். 

பிரம்மக்கல் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்கியாரா மற்றும் டன்டல்கோன் பகுதிகளுக்கு இடையே சுரங்கவழிச் சாலைக் கட்டப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. 150 மீட்டர் அகலம் மற்றும் நாலறை கிலோமீட்டர் தூரம் கொண்ட பகுதி இடிந்து விழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்தவுடன் உத்தரகாசியின் காவல் கண்காணிப்பாளர் அர்பன் யாதுவான்ஷி சம்பவ இடத்திற்கு விரைந்தார். உடனே நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தார். 

மேலும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகத்தின் பணியாளர்கள் ஆகியோரும் சம்ப இடத்தில் உள்ளனர். 

இந்த சுரங்கவழிப்பதை மூலம் உத்தரகாஷி, யாமுன்டோரி இடையே 26 கிலோமீட்டர் பயணதூரம் குறைக்கப்படவிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

SCROLL FOR NEXT