தீக்கு இரையானக் கட்டடம்! 
இந்தியா

ஹைதராபாத் ரசாயனக் கிடங்கு தீவிபத்தில் 6 பேர் பலி, 3 பேர் படுகாயம்!

ஹைதராபாத்தில் நடந்த பெரும் தீவிபத்தில் 6 பேர் மரணமடைந்துள்ளனர், 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

DIN

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், நவம்பர் 13 அன்று ரசாயனக் கிடங்கு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் 6 பேர் பலியானதோடு 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைராபாத்திலுள்ள பம்பள்ளியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு மாடிக்குடியிருப்பு ஒன்றில் கீழ் தளத்தில் இருந்த இந்தக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

மேலும், கீழ்தளத்தில் கார் பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது, காரிலிருந்து வந்த தீப்பொறி அங்கிருந்த ரசாயன பீப்பாயில் பட்டுத் தீப்பற்றியுள்ளது. கீழ்தளம் முழுக்க வேகமாக பரவிய தீ, மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் மொத்தமாக 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர் எனத் துணைக் காவல்துறை ஆணையர் வெங்கடேஷ் ராவ் தெரிவித்துள்ளார். 

மேலும் தகவலறிந்து உடனே வந்த தீயணைப்புத்துறையினர்நெருப்பைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாகத் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT