இந்தியா

ராஜஸ்தான் தேர்தல்: மக்களவை தலைவர் ஓம் பிர்லா வாக்களித்தார்

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வாக்களித்தார்.

DIN

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வாக்களித்தார். 

200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (நவ.25) 199 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கரண்பூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் குா்மீா் சிங் சமீபத்தில் காலமானதை அடுத்து அந்த ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாக்குச் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் எனும் ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இந்த தேர்தலில் மொத்தம் 1,862 வேட்பாளா்கள்  போட்டியிடுகின்றனர். சுமாா் 5.25 கோடி பேர் வாக்காளர்களாக உள்ளனர். தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 51,507-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2.74 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் பந்தை திருப்புகிற சுந்தரன்... அஸ்வினுக்கு நன்றி கூறிய சிஎஸ்கே!

கோவை, நீலகிரிக்கு 3 நாள்கள் கனமழை எச்சரிக்கை!

நான் படிக்கணும்! முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்!

குஜராத்தில் முகவரி இல்லாத கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை! ராகுல் கேள்வி

அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பில் செய்யறிவு(ஏஐ) பாடம் கட்டாயம்!

SCROLL FOR NEXT