இந்தியா

துபைக்கு அழைத்துச் செல்லாத கணவனைக் கொன்ற மனைவி!

புணேவில் தன் பிறந்த நாளுக்குத் துபை அழைத்துச் செல்லாததால் ஏற்பட்ட  சண்டையில் கணவனைக் கொன்ற மனைவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

DIN

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கணவரைக் கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

புணே நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில்  கடந்த வெள்ளிக்கிழமை இந்தக் கொலைச் சம்பவம் நடந்ததாக  மனைவியின் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில் தன் பிறந்த நாளுக்குத் துபை அழைத்துச் செல்லாத கோபத்தில் கணவரை மூக்கில் குத்தியதால் அவர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

கொல்லப்பட்ட கட்டுமானத் துறைத் தொழிலதிபர் நிகில் கன்னா, ஆறு ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி ரேணுகாவைக் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த பிறந்த நாளுக்கு விலையுயர்ந்த பரிசுகள் தராததாலும் துபை அழைத்துச் செல்லாததாலும் கணவர் மீது ரேணுகாவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் உறவினர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் தன்னை அழைத்துச் செல்லாததால் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சண்டையில் அவரை ஓங்கி மூக்கில் குத்தியதில், அவரது மூக்கு மற்றும் பற்கள் உடைந்து அதிக அளவில் இரத்தம் வெளியேறி அவர் உயிரழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா்: நவ.21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

டிடிஇஏ பள்ளிகளில் பயிலும் வடஇந்திய மாணவா்களுக்கு தமிழ்ப் போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

SCROLL FOR NEXT