மத்தியப் பிரதேசத்தில் 2018ல் வெற்றி; 2020ல் தோல்வி; காங்கிரஸுக்கு அடுத்து என்ன?
மத்தியப் பிரதேசத்தில் 2018ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி; 2020ம் தேர்தலில் தோல்வி என்ற நிலையில், வரும் பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு அடுத்து என்ன என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தில் 2018ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி; 2020ம் தேர்தலில் தோல்வி என்ற நிலையில், வரும் பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு அடுத்து என்ன என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.
கடந்த 2003ஆம் ஆண்டில் நடந்த பேரவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், 2018-ம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேசத் தேர்தலில் 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 114 இடங்களைக் கைப்பற்றி ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சி அமைத்தது.
இதையும் படிக்க.. இதயத்துக்காக தினமும் 50 படிகள் ஏறினால் போதும்!
ஆனால் இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரை ஆதரிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு மாறிய பிறகு, மார்ச் 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், கட்சியின் தலைகீழானது. மாநிலத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
இந்த நிலையில்தான், 2023ஆம் ஆண்டுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போதுள்ள ஊழல், வேலை வாய்ப்புகள் மற்றும் பழங்குடியினர் பிரச்னைகள், விவசாயிகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான விவகாரங்களைக் கையிலெடுப்பதன் மூலம் பாஜகவை எதிர்கொண்டு வீழ்த்த காங்கிரஸ் தயாராகி வருகிறது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் அடைந்த வெற்றியின் மூலம் கிடைத்த உத்வேகத்துடன், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத்தேர்தலை சந்திக்கும் முன் காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு பலப்பரீட்சையாக அமைந்துள்ளது.
இதையும் படிக்க.. ரூ.20 கோடியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு டெண்டர்
காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட தற்போது 40 சதவீதமாக அதிகரித்திருப்பது பலமாகக் கருதப்படுகிறது. கடந்த காலங்களில், ஏராளமான பாஜக தலைவர்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
பலவீனமாகப் பார்க்கப்படுவது..
பாஜக மற்றும் அதன் கூட்டணியின் உறுதியான கட்டமைப்பைப் போலல்லாமல், வலுவான அமைப்புமுறையை ஏற்படுத்தாதது.
சிந்தியா இல்லாததால், குவாலியர்-சம்பல் பகுதியில் கடந்த முறை 34-ல் 26 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது இந்த முறை குறையலாம்.
கடந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பேரவைத் தேர்தல்களில் 66 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறவேயில்லை என்பது போன்ற விஷயங்கள் பலவீனங்களாகக் கருதப்படுகின்றன.