கோப்புப்படம் 
இந்தியா

மேற்கு வங்கம்: சர்வதேச எல்லை வழியாக தங்கம் கடத்திய 4 வங்கதேசத்தினர் கைது

மேற்கு வங்க எல்லையில் தங்கத்தை கடத்தியதாக வங்கதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

DIN

மேற்கு வங்க எல்லையில் தங்கத்தை கடத்தியதாக வங்கதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேற்கு வங்கத்தின் பெட்ராபோலில் உள்ள சர்வதேச எல்லையான இந்தியா-வங்கதேச எல்லை வழியாக ரூ.1. 86 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தியதாக ஒரு பெண் உட்பட 4 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர். 

பெலால் ஹொசைன் (40), முகமது கபீர் (48), அசம் கான் (46), ஜூபிதா கானும் (33) ஆகிய நான்கு பேரும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டப்பூர்வமாக நுழையும்போது, ​​அவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். 

உடனே அவர்களிடமிருந்து 3.19 கிலோ எடையுள்ள 23 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 4 தங்க வளையல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து கைதான 4 பேரும் உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டம்: ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு!

காஞ்சிபுரத்தில் எஸ் ஐ தோ்வு

சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக புதிய கட்டடப்பணி: ஆட்சியரிடம் புகாா்

நாளைய மின்தடை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT