முகப்பு
இந்தியா

மக்களைப் பிளவுபடுத்துவது பாஜகவின் வழக்கம்: கார்கே குற்றச்சாட்டு

ராஜஸ்தானில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டால், 2024-ல் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:09 AM
பகிர்:


ராஜஸ்தானில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டால், 2024-ல் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

பாரான் மாவட்டத்தில் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்திற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை இன்று கார்கே தொடங்கிவைத்தார். 

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். 2024-ல் அக்கட்சி மத்தியிலும் ஆட்சி அமைக்கும் என கார்கே உறுதிப்படத் தெரிவித்தார். 

2019 மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானிலிருந்து 25 பாஜக எம்.பி.க்களை மக்கள் தேர்ந்தெடுத்தனர், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு நிதியோ, தண்ணீரையோ அவர்களால் தரமுடியவில்லை. 

நாடு தழுவிய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான காங்கிரஸின் கோரிக்கை குறித்து கார்கே, இந்த நடவடிக்கையின் மூலம் மக்களைப் பிளவுபடுத்த முயல்வதாக மோடி குற்றம் சாட்டினார். 

மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவது பாஜகவின் வழக்கம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →