முகப்பு
இந்தியா

பஞ்சாப் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான குல்பிர் சிங் ஜிரா செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:10 AM
பஞ்சாப் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது
பகிர்:

பஞ்சாப் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான குல்பிர் சிங் ஜிரா செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.

பஞ்சாயத்துகளுக்கு மானியம் வழங்குவதில் தொகுதி மேம்பாட்டு திட்ட அதிகாரி(பிடிபிஓ) ஊழல் செய்வதாக குற்றச்சாட்டு எழுப்பிய குல்பிர் சிங், தொண்டர்களுடன் பிடிபிஓ அலுவலகத்தில் மூன்று நாள்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுப்பதாக பிடிபிஓ அதிகாரி தரப்பில் காவல் நிலையத்தில் குல்பிர் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ஃபிரோஸ்பூரில் குல்பிர் சிங்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட நிலையில், ஃபிரோஸ்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.