இந்தியா

போர்நிறுத்தத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா விலகியது அவமானகரமானது: பிரியங்கா காந்தி!

மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தம் கோரிய தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியாவுக்கு அவமானம் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி கூறினார்.

DIN

இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அழிக்கப்படுவதை அமைதியாகப் பார்ப்பது இந்தியா இதுவரை நிலைநிறுத்திய உயர்ந்த கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்தம் மற்றும் காஸா பகுதியில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ‘பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல்’ என்ற தலைப்பில் கொண்டுவரப்பட்ட ஜோர்டானிய வரைவு தீர்மானத்தின் மீது ஐ.நா.பொதுச்சபையில் வாக்களிப்பதை இந்தியா வெள்ளிக்கிழமை புறக்கணித்தது. 

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.பொதுச்சபையில் 120 நாடுகள் போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 

இதை எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தத்திற்கு வாக்களிப்பதில் இருந்து நமது நாடு ஒதுங்கியிருப்பது எனக்கு அதிர்ச்சியும், வெட்கமும் அளிக்கிறது” என்று கூறியுள்ளார். 

மேலும், “நமது நாடு அகிம்சை தத்துவத்தால் உருவானது. சர்வதேச சமூகத்தின் உறுப்பினராக அதன் நடவடிக்கைகளை வழிநடத்திய பெருமை இந்தியாவுக்கு உண்டு. 

ஆனால், மனிதகுலத்தின் ஒவ்வொரு சட்டமும் தூள் தூளாக்கப்படுவதையும், உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள், மின்சாரம் ஆகியவை பல லட்சக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்படுவதையும், பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அழிக்கப்படுவதையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பது இந்தியா இதுவரை சர்வதேச அரங்கில் நிலைநிறுத்திய உயர்ந்த கோட்பாடுகளுக்கு எதிரானது” என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்நாடகம் 13.78 டிஎம்சி நீரை திறந்துவிட ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

SCROLL FOR NEXT