இந்தியா

ஓராண்டை நிறைவு செய்யும் பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப் பயணம்: 722 மாவட்டங்களில் பாத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் காங்கிரஸ்!

பாரதத்தை இணைப்போம்  ஒற்றுமை நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைபெறவுள்ளதையடுத்து, காங்கிரஸ் சார்பில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி 722  மாவட்டங்களில் பாத யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது.

DIN

பாரதத்தை இணைப்போம்  ஒற்றுமை நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைபெறவுள்ளதையடுத்து, காங்கிரஸ் சார்பில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி 722  மாவட்டங்களில் பாத யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது.

பாரதத்தை இணைப்போம் என்ற பெயரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி ஒற்றுமை நடைப்பயணத்தை முன்னெடுத்தார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் ஜம்மு-காஷ்மீரில் சென்று நிறைவடைந்தது. இந்த நிலையில், பாரதத்தை இணைப்போம்  ஒற்றுமை நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைபெறவுள்ளதையடுத்து, காங்கிரஸ் சார்பில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி 722  மாவட்டங்களில் பாத யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் (பொறுப்பு) கே.சி.வேணுகோபால் கூறியதாவது: பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் நாடு முழுவதும் மற்றும் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப் பயணத்தால் புத்துணர்ச்சி பெற்றனர்.

செப்டம்பர் 7, 2022 காங்கிரஸுக்கு மிக சிறப்பான நாள். இந்த நாளில் எங்களது தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான  வரலாற்று சிறப்புமிக்க ஒற்றுமை நடைப்பயணத்தைத்  தொடங்கினார். அரசியல் கட்சித் தலைவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட யாத்திரையாக பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப் பயணம் அமைந்தது. 136 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒற்றுமை நடைப்பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 நகரங்கள் மற்றும் 76 மக்களவைத் தொகுதிகளுக்கு சென்றடைந்தது. இந்த பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் கர்நாடகத் தேர்தல் முடிவில் எதிரொலித்தது. 

பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப் பயணம் ஓராண்டை நிறைவு செய்ய உள்ளது. ஓராண்டு நிறைவு பெறுவதை நினைவுகூறும் விதமாக நாடு முழுவதும் 722  இடங்களில் பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான இடைவெளியில் இந்த நடைப்பயணம் நடைபெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்து நிறுவனத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்படாத ஆய்வு!

கரூா் கூட்டநெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு!

அமெரிக்க - சீன வா்த்தகப் போரால் இந்தியாவுக்கு பலன்: நிபுணா்கள் கணிப்பு

நில இழப்பீடு விவகாரம்: மதுக் கடைகளின் விற்பனை தொகையை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவு

ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT