இந்தியா

மக்களவைத் தேர்தல்: பாஜக கூட்டணியில் ம.ஜ.த.; 4 தொகுதிகள் ஒதுக்கீடு!

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தகவல் தெரிவித்துள்ளார். 

DIN

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறது. 

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு என கட்சிகள் தீவிர தேர்தல் பணிகள் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் கர்நாடகத்தில் முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி, பாஜகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது.

அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் மஜதவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு செய்ய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் தெரிவித்துள்ளார். 

முன்னதாக தேவ கௌடா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார். 

கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத தனித்துப் போட்டியிட்டன. காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT