இந்தியா

டீசல் கார்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி: நிதின் கட்கரி பரிந்துரை

DIN

நாட்டில் டீசல் கார்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரை செய்துள்ளார். 

நாட்டில் டீசல் வாகனங்களினால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவதனால் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரைத்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், '2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு 52% ஆக இருந்த டீசல் வாகனங்கள் தற்போது 18% ஆக குறைந்துள்ளது. ஆட்டோமொபைல் துறை இப்போது வளர்ந்து வருவதால் டீசல் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது. டீசல் வாகனங்கள் அதிக மாசுபாட்டை ஏற்படுத்துவதால் அவற்றின் உற்பத்தி குறைக்கப்பட வேண்டும். எனவே டீசல் கார்களுக்கு மாசுபாட்டு வரியாக 10% கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சருக்கு நான் பரிந்துரைக்கிறேன்' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

ஓடிடியில் வெளியானது ஆவேஷம்!

சிகாகோவில் பயின்றுவந்த தெலங்கானா மாணவர் மாயம்

இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை

கமல்ஹாசன் பொறாமைப்படும் விஷயம் எது?

SCROLL FOR NEXT