இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம்!

இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் வரவேற்றுள்ளது.

DIN

இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் வரவேற்றுள்ளது.

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் புதன்கிழமை 8 மணி நேர விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினா்களும், எதிராக 2 உறுப்பினா்களும் வாக்களித்தனா். கிட்டத்தட்ட ஒருமனதாக இந்த மசோதா நிறைவேறியது. 

இந்த நிலையில், இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் வரவேற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகத்தின் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பொது வாழ்வில் அனைத்துத் துறைகளிலும்  மகளிரின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும். பொது வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் மகளிரின் பங்களிப்பு இருப்பது சமூகத்தில் ஒட்டுமொத்தமாக பெரிய நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கான முக்கிய முடிவுகளில் ஒன்றாக இந்த மசோதா உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு குறைந்தது 50 சதவிகித மாநிலங்கள் இந்த மசோதாவுக்கு தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT