இந்தியா

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறக்கக்கூடாது: கர்நாடகத்தில் பாஜகவினர் போராட்டம்!

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. 

கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

எனினும் கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 

அதில், தமிழகத்துக்கு காவிரி நீா் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனால் தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டிய கட்டாயம் கர்நாடகத்துக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கர்நாடகத்தில் பெங்களுருவில் பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஏற்கெனவே கர்நாடக விவசாயிகளும் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT