இந்தியா

கர்நாடகத்துக்கு 6 துணை முதல்வர்கள்?

கர்நாடகத்துக்கு மேலும் 5 துணை முதல்வர்களை நியமிக்க மாநில அரசு ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜ் ராயரெட்டி தெரிவித்துள்ளார். 

DIN

கர்நாடகத்துக்கு மேலும் 5 துணை முதல்வர்களை நியமிக்க மாநில அரசு ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜ் ராயரெட்டி தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் நடப்பாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் உள்ளனர். 

இந்நிலையில் கர்நாடக மாநில அரசுக்கு மொத்தம் 6 துணை முதல்வர்களை நியமிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்கு மாநில அமைச்சர்கள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜ் ராயரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மேலும் 5 துணை முதல்வர்களை நியமிக்க மாநில அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார். 

சிறந்த நிர்வாகத்திற்காக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா இந்த யோசனையை முன்வைத்ததாகவும் இதற்கு சக அமைச்சர்கள் பலரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா கூறியுள்ளார். 

தற்போது அதிகபட்சமாக ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசில் 5 துணை முதல்வர்கள் உள்ளனர். உத்தரபிரதேசம், நாகாலாந்து,மேகாலயம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இரண்டு துணை முதல்வர்கள் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT