-
இந்தியா

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

DIN

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளில் படித்து பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி முடிவடைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பத்து மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வினை இந்தியாவில் 39 லட்சம் பேர் எழுதியருக்கிறார்கள். தேர்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதில் தான் உள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்தே மாணவர்கள் தங்களது அடுத்தக்கட்ட பட்டப்படிப்புகள் குறித்து முடிவெடுக்க இயலும் என்பதால் இந்த தேர்வு முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

வழக்கமாக சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும். இந்த ஆண்டும் அவ்வாறே வெளியாகும் என்றும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மே மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் சிபிஎஸ்இ தரப்பில் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தொடங்குவதால், விடைத்தாள் திருத்தும் பணிகள் எவ்வாறு நடத்தப்படும் என்ற சந்தேகமும் பெற்றோரிடையே எழுந்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி தேர்வு முடிவு வெளியாகியிருக்கிறது. அதற்கு முன்பு 2019ஆம் ஆண்டும் மே முதல் வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகியிருக்கிறது. ஆனால், கரோனா காலங்களில் ஜூலை மாதத்தில்தான் தேர்வு முடிவு வெளியானது. 2024ஆம் ஆண்டு எப்போது வெளியாகும் என்று சிபிஎஸ்இ விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT