இந்தியா

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

கோடைக்காலம் முடியும் வரை வழக்குரைஞர்கள் கருப்பு அங்கி அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

DIN

கொல்கத்தாவில் வெப்ப அலை வீசி வருவதால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருப்பு அங்கி அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் அடுத்த ஐந்து நாள்களுக்கு இதே வெப்பநிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்தில்கொண்டு, கோடைக்காலம் முடியும் வரை வழக்குரைஞர்கள் கருப்பு அங்கி அணிவதிலிருந்து விலக்கு அளித்து தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம் உத்தரவிட்டுள்ளளதாக உயர்நீதிமன்ற அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 10-ம் தேதி கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் மீண்டும் திறக்கப்படும் வரை வழக்குரைஞர்கள் சாதாரண உடைகளை அணிந்து வரலாம்.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மே 19 முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்கால் மீனவா்கள் மீது ஆந்திர மீனவா்கள் தாக்குதல்: 2 விசைப் படகுகள் சிறைபிடிப்பு

பிக் பாஸ் 9: இரண்டாம் நாளே கைகலப்பு! என்ன நடந்தது?

பாகிஸ்தானில் மீண்டும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது தாக்குதல்! பெட்டிகள் தடம் புரண்டதில் 7 பேர் படுகாயம்!

கேஜரிவாலுக்கு அரசு இல்லத்தை ஒதுக்கியது மத்திய அரசு!

விழி பாயும் மனம் பாயும்... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT