ஜெய்ப்பூர் 
இந்தியா

மழை: 24 மணிநேரத்தில் 7 மாநிலங்களில் 32 பேர் பலி!

கோர தாண்டவமாடும் மழை

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மழைதொடர்பான விபத்துகளில் 32 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. புது தில்லியில் நேற்று மாலை முதல் 108 மி.மீ. அளவிலான மழை பெய்துள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில், ஜூலை மாதத்தில் ஒரே நாளில் பெய்த மழையின் அதிகபட்ச அளவாகும்.

ஜூலை மாதத்தில் இயல்பு அளவைவிட 9% அதிக மழைப்பொழிவை பதிவு செய்துள்ளதாகவும், நாட்டின் மத்தியப் பகுதியில் 33% அதிக மழை பெய்ததாகவும் இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

புது தில்லி

மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிகன மழை பெய்கின்ற காரணத்தால், 7 மாநிலங்களில் 32 பேர் வெள்ளத்தாலும், மின்னல் தாக்கியும் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் பலத்த மழையால் 10 பேரும், இமாச்சல பிரதேசத்தில் 4 பேரும், தில்லியில் 5 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 2 பேரும், ஹரியாணாவில் 3 பேரும், ராஜஸ்தானில் வெள்ளத்தால் 3 பேரும், பிகாரில் மின்னல் தாக்கியதில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

வயநாடு

இதுதவிர்த்து, கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரையில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: ஒருநபர் ஆணையம், சிறப்பு விசாரணைக் குழு ரத்து

மேற்கு வங்க வெள்ளத்துக்கு காரணம் பூடான்: இழப்பீடு தர மம்தா வலியுறுத்தல்

சட்டப்பேரவை இன்று கூடுகிறது: மறைந்த பிரமுகா்களுக்கு இரங்கல்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

இன்னிங்ஸ் தோல்வியை தவிா்த்த மேற்கிந்தியத் தீவுகள்: எளிதான வெற்றியை நோக்கி இந்தியா

SCROLL FOR NEXT