முகப்பு
இந்தியா

ஹிமாசலில் மேக வெடிப்பு: 46 பேர் காணவில்லை

மாநில பேரிடர் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 10:28 AM
ஹிமாசலில் மேக வெடிப்பு - Ani
பகிர்:

ஹிமாசல் பிரதேசத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழையால் 46 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

சிம்லா மாவட்டம், ராம்பூர் அருகே சமேஜ் காட் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 36 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக மாவட்ட பேரிடர் மேலாண் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு மேக வெடிப்பு சம்பவத்திலும் 10 பேர் மாயமாகியுள்ளனர். அதில், இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Advertisement

இந்த தகவலை தொடர்ந்து, துணை ஆணையர் அனுபம் கஷ்யப் தலைமையில் அப்பகுதிக்கு சென்ற காவலர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் சிங்கை தொடர்பு கொண்டு பேசிய ஜெ.பி.நட்டா, மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

மேலும், பாஜக தொண்டர்கள் மீட்புப் பணிகளில் இணைந்து செயல்படவும் நட்டா அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.