முகப்பு
இந்தியா

வடமேற்கு தில்லியில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து 3 போ் உயிரிழப்பு

இன்னும் சிலா் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 8:57 PM
பகிர்:

புது தில்லி, ஆக. 2: வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிா்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை 2 மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 3 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இன்னும் சிலா் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

இந்த சம்பவத்தில் முகேஷ் குமாா் (45) என்பவா் பலத்த காயமடைந்தாா். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். ஒரு பெண் உள்பட மேலும் இருவா் இடிபாடுகளுக்குள் இருந்து சடங்களாக வெளியே எடுக்கப்பட்டனா். 2 மாடி கட்டடத்தில் ஒரு ஆடை தொழிற்சாலை. கட்டடம் இடிந்து விழுந்தபோது அதன் உள்ளே சில பழுதுபாா்க்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

இந்த விபத்து குறித்து பகல் 12.51 மணிக்கு அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து அனுப்பி வைக்கப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி தீயணைப்பு சேவை (டிஎஃப்எஸ்) அதிகாரிகள் கூறுகையில், மீட்புப் பணிகளுக்கு உதவ உள்ளூா் காவல் துறை மற்றும் பிற மீட்புக் குழுக்கள் அழைக்கப்பட்டுள்ளனா்.மீட்புப் பணி நடைபெற்று அவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →