அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்ட மீன் மற்றும் எலுமிச்சை.  புகைப்படம்: நன்றி எக்ஸ் தளம்
இந்தியா

ஆசனவாய்க்குள் உயிருடன் மீனை விட்ட இந்தியர்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்

வியட்நாமில் 31 வயது இந்தியர் ஒருவர் ஆசனவாய் வழியாக உயிருள்ள விலாங்கு மீனை விட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

வியட்நாமில் 31 வயது இந்தியர் ஒருவர் ஆசனவாய் வழியாக உயிருள்ள விலாங்கு மீனை விட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 27ஆம் தேதி 31 வயது இந்தியர் ஒருவர் கடும் வயிற்று வலி காரணமாக அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். உடனே அவருக்கு எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. மருத்துவப் பரிசோதனையில் விலாங்கு மீன் எலும்புக்கூடு தெரியவதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த மீன் நோயாளியின் மலக்குடல் மற்றும் பெருங்குடலை கடித்து அதன் வழியாக வயிற்று குழிக்குள் நுழைந்திருந்தது. உடனே அந்த மீனை ஆசனவாய் வழியாக அகற்ற மருத்துவர்கள் முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. காரணம், அந்த நோயாளி விலாங்கு மீனுக்கு பிறகு எலும்பிச்சை பழம் ஒன்றையும் செருக்கியிருக்கிறார்.

உடனே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் இருந்த விலாங்கு மீன் மற்றும் எலுமிச்சை பழத்தையும் அகற்றியுள்ளனர். நோயாளியின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட அந்த மீன் 63.5 செ.மீ. நீளம் கொண்டதாக இருந்துள்ளது. இந்நிகழ்வு மருத்துவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆஜர்!

மழையின் வாசம்... சௌந்தர்யா ரெட்டி!

பிகார் வாக்காளர் பட்டியல்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT