விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெங்காயம் மற்றும் இதர காய்கறிகளின் விலை உயர்வுக்கு எதிராக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வெங்காய மாலை அணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காய்கறிகளின் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. வக்ப் சட்டத்தில் திருத்தம் செய்யும் முக்கிய மசோதா இன்று தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.