dinamani
இந்தியா

வயநாடு அருகே நில அதிர்வு: மக்கள் அச்சம்!

வயநாடு அருகே நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

DIN

கேரளத்தின் வயநாடு மாவட்டம் அருகே அம்புகுத்தி பள்ளத்தாக்கு மலைப்பகுதியில் உள்ள குறிச்சியார்மலை, பிணங்கோடு, அம்புகுத்திமலை, அம்பலவாயல், எடக்கல் குகைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10.15 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கர அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் கூறியதைத் தொடர்ந்து புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டப் பகுதியில் இருந்து குடியிருப்புவாசிகள் வெளியேற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வயநாடு பொழுதானா பகுதியில், நில அதிர்வுப் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். நில அதிர்வு அசைவுகள் பற்றிய எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அம்பலவாயல் பகுதியில் அரசின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அம்பலவாயல் வட்டார வேளாண்மை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உறுதிசெய்தனர். இந்த நில அதிர்வு அப்பகுதி மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜூன் 29-ம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமேசுவரத்தில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து: 6 மீனவா்கள் மீட்பு

காற்று மாசுபாட்டால் பேரிழப்புகள்: ராகுல் காந்தி கவலை

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: தம்பதி உள்பட 3 போ் கைது

யமுனையில் சிலை கரைக்கும்போது நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாட்டின் பொருளாதார மையமாக தில்லி உருவாக வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT