நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த நிலையில் மாநிலங்களவையில் இந்த முறை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுடன் சமாஜவாதி கட்சி எம்.பி.யும் நடிகையுமான ஜெயா பச்சனுக்கும் அவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கும் கடும் ஏற்பட்ட வாக்குவாதமும் ஏற்பட்டது.
இது முதல்முறை அல்ல, கடந்த 10 நாள்களில் இது 3 ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வாக்குவாதத்தால் சமூக ஊடகங்களில் எல்லாம் ஜெயா பச்சனின் மருமகளும் புகழ்பெற்ற நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் பெயர் டிரெண்டிங்காகி வருகிறது.
இன்றைய அவை நடவடிக்கையின்போது, எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் குற்றம்சாட்டி அவையிலிருந்து வெளியேறினர்.
”ஜகதீப் தன்கர் உபயோகிக்கும் மொழி ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. நான் ஒரு நடிகை. எனக்கு உடல் மொழியும் முக பாவனைகளும் நன்கு புரியும். நாங்கள் உங்களுடன் வேலை செய்பவர்கள்தான் ஆனால் உங்கள் தொனியை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார் ஜெயா பச்சன்.
இதற்கு பதிலளித்த ஜகதீப் தன்கர், “ ஜெயா அவர்களே, உங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. நீங்கள் இயக்குநர் சொல்லும்படி நடிக்கும் நடிகை. ஆனால் ஒவ்வொரு நாளும் என்னால் உங்களுக்கு பாடம் எடுக்க முடியாது. நீங்கள் எனது தொனியைப் பற்றி பேசுகிறீர்களா? இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் அவையை மதித்து நடக்க வேண்டும்” எனக் கூறினார்.
இது முதல்முறையல்ல, இதற்கு முன்பே இரண்டு முறை ஜகதீப் தன்கருக்கும் ஜெயா பச்சனுக்கும் வாக்கு வாதம் நடந்துள்ளது.
ஜூலை 29ஆம் நாள் தன்னை எனது கணவர் (ஜெயா அமிதாப் பச்சன்) என அழைக்க வேண்டாம். ஜெயா பச்சன் என்றாலே போதும். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்த அடையாளம் இருக்கிறது என மாநிலங்களவை துணை தலைவரிடம் ஜெயா பச்சன் கூறினார்.
ஆக. 5 ஆம் நாள் மீண்டும் கணவர் பெயருடன் சேர்த்து உச்சரிக்கவே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது ஜகதீப் தன்கர், “தேர்தல் ஆணையத்தில் உங்கள் பெயர் அப்படித்தான் இருக்கிறது. முதலில் அதை மாற்றுவதற்கற்கான வழிமுறைகள் இருக்கின்றன. மாற்றிவிட்டு அந்தப் பெயரை இங்கு வந்து சமர்ப்பியுங்கள்” என்றார். அப்போதிலிருந்தே இருவருக்கும் இந்தச் சண்டைகள் தொடங்கிவிட்டன.
எக்ஸில் பாஜக ஆதரவாளர்கள் நடிகை ஐஸ்வர்யா ராய் பாவம். இவருடன் எப்படி சமாளித்து வாழ்கிறார் என பேசிவருகிறார்கள். இதனால் எக்ஸில் ஐஸ்வர்யராய் பெயர் டிரெண்டிங்கில் உள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய் கடைசியாக பொன்னியின் செல்வன்2 படத்தில் நடித்தார். அமிதாப் பச்சன் கல்கி 2898 ஏடி படத்தில் அசத்தலாக நடித்திருந்தார்.
அபிஷேக் பச்சன் 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த கூமெர் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.