முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையால் பரபரப்பு நிலவுகிறது.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 4:53 PM
கோப்புப் படம்.
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையால் பரபரப்பு நிலவுகிறது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அஹ்லான் பகுதியை சுற்றிவளைத்து காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது அவர்கள் சந்தேகத்திற்கிடமான பகுதியை நெருங்கியதும் அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதற்கு பாதுகாப்புப்படையினர் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது என்றனர். இந்த துப்பாக்கிச்சண்டையால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது. முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, கதுவா மாவட்டத்தின் மல்ஹர், பானி மற்றும் சியோஜ்தர் ஆகிய இடங்களில் கடைசியாகக் காணப்பட்ட நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

Advertisement

மேலும் அவர்களை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். சமீப காலமாக ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தொடர் என்கவுன்ட்டர்கள் அரங்கேறி வருகின்றன. இதில் ஏராளமான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.