இந்தியா

போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிலிருந்து தாய்லாந்து செல்ல முயன்ற வங்கதேச நபர் கைது!

வங்கதேசத்தில் போதிய வருமானம் கிடைக்காததால், சிலர் தாய்லாந்திற்கு செல்வதாகத் தகவல்

இணையதளச் செய்திப் பிரிவு

வங்க தேசத்தின் ஹூக்லி மாவட்டத்தைச் சேர்ந்த ஷிமுல் பாருவா என்பவர், போலியான இந்திய ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மூலம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆஷிஷ் ராய் என்ற போலியான அடையாளத்தை உருவாக்கி, லக்னோவில் உள்ள சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாங்காக்கிற்கு செல்ல முயன்றுள்ளார்.

ஆனால், ஷிமுல் காண்பித்த அடையாள அட்டைகளில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய விமான நிலைய அதிகாரிகள், ஷிமுலிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஷிமுலிடம் விசாரணை மேற்கொண்டதில், ஷிமுல் அடையாளமாகக் காட்டிய அனைத்தும் போலியானவை என்று கண்டுபிடித்தனர்.

மேலும், ஷிமுலின் உடைமைகளைச் சோதனை செய்ததில், அவருடைய உண்மையான வங்கதேச பாஸ்போர்ட் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, ஷிமுலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சரோஜினி நகர் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூடுதல் தகவல்களாக, வங்கதேசத்தில் போதிய வருமானம் கிடைக்காததால், சிலர் தாய்லாந்தில் வேலைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்திலும், வங்கதேசத்தைச் சேர்ந்த மூவர், போலி இந்திய ஆவணங்களுடன், தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாங்காக்கிற்கு, விமானத்தில் ஏற முயன்றபோது பிடிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்குவதற்கு, வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் விரிவான, மோசடி நெட்வொர்க்குகளைக் கண்டுபிடித்ததாக, புனே காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

ஹரியாணா ஐஜி தற்கொலை: டிஜிபி-க்கு கட்டாய விடுப்பு!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

SCROLL FOR NEXT