குலாம் நபி அசாத்(கோப்புப்படம்) 
இந்தியா

ஜம்மு- காஷ்மீருக்கு பேரவைத் தேர்தல்: குலாம் நபி ஆசாத் வரவேற்பு

ஜம்மு- காஷ்மீருக்கு பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) தலைவா் குலாம் நபி ஆசாத் வரவேற்பு தெவித்துள்ளார்.

DIN

ஜம்மு- காஷ்மீருக்கு பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) தலைவா் குலாம் நபி ஆசாத் வரவேற்பு தெவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தேர்தல் அறிவிப்பை வரவேற்கிறோம். அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலாக இருக்கும் என நம்புகிறோம்.

மேலும் வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் பாதுகாப்பும் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் நம்புகிறோம்.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீர் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்றார். ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார்மற்றும் டாக்டர் சாந்து ஆகியோர் தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டனர்.

அதன்படி ஜம்மு -காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

SCROLL FOR NEXT