அமைச்சர் கிரண் ரிஜ்ஜு 
இந்தியா

மருத்துவர் கொலை அனைவருக்குமான கவலை: கிரண் ரிஜ்ஜு

கொல்கத்தா சம்பவத்திற்குப் பிறகு பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை அளிக்கின்றது.

பிடிஐ

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அனைவருக்குமான கவலை என்று அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெற்றுவரும் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து மருத்துவர்களும், பொது மக்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புவனேஸ்வர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரிஜ்ஜு பேசினார்.

கொல்கத்தா சம்பவத்திற்குப் பிறகு பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை அளிக்கின்றது. இது மருத்துவ ஊழியர்களிள் பிரச்னை மட்டுமல்ல. அனைவருக்குமான பாதுகாப்பு பிரச்னை.

மேற்கு வங்க சம்பவத்தால் அனைவரும் கவலையும் ஆத்திரமும் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

இதையடுத்து, ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் டாக்டர் சந்தீப் கோஷ், சிபிஐ விசாரணைக்கு இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் ஆஜராகியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT