ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்) 
இந்தியா

ராகுல், கார்கே இன்று ஜம்மு-காஷ்மீர் பயணம்!

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களோடு ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார்.

பிடிஐ

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீருக்குச் செல்கின்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் சட்டபேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முக்கிய சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளனர். முதலில் இரு தலைவர்களுக்கு ஜம்முவுக்கு சென்று பின்னர் ஸ்ரீநகருக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் இருந்து தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள் என்று ஏஐசிசி பொதுச் செயலாளர் குலாம் அகமது மீர் பிடிஐயிடம் தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் முகாமிட்டுள்ள மீர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர்கள் இருவரும் வியாழக்கிழமை காஷ்மீர் பள்ளத்தாக்கின் 10 மாவட்டங்களில் உள்ள கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் சந்திப்புகளில் ஈடுபடுவார்கள் என்றார்.

ஸ்ரீநகரில் அவர்களின் உரையாடலுக்குப் பிறகு, அவர்கள் மாகணங்களின் 10 மாவட்டங்களின் பணியாளர்களுடன் கலந்துரையாட பிற்பகலில் ஜம்முவுக்குச் செல்வார்கள். அதன்பிறகு தில்லி புறப்பட்டுச் செல்வார்கள் என்றார் அவர் கூறினார்.

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களோடு ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார்.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாக செப்.18, செப்.25, அக்.1 ஆகிய தேதிகளில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் ஸ்ரீசாணாத்தியம்மன் கோயில் நவராத்திரி நிறைவு

தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்: கட்சியினா் மரியாதை

ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஏற்கனவே இருந்தவா்களுக்கு கடைகள்: நகா்மன்றத் தலைவா் உறுதி

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT