அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு திங்கள்கிழமை இரவு வந்தாா். பிரதமராக அவரது முதல் இந்திய பயணம் இதுவாகும்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமா் மோடி - அன்வா் இப்ராஹிம் இடையே செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அப்போது, பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனா்.
பின்னா் இருவரும் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று(புதன்கிழமை) மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்துப் பேசியுள்ளார்.
இரு நாடுகளில் உள்ள பிரச்னைகள், உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருவரும் பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.