பேருந்து மீது லாரி நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலி
ஒடிஸாவில் பேருந்தும் லாரியும் மோதியதில் 4 பேர் பலியானதுடன், 13 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
ஒடிஸாவில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் சாலையோரக் கடையில் இருந்தவர்களும் பலியாகினர்.
ஒடிஸாவின் சமர்ஜோலாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெர்ஹாம்பூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்து மீது, அஸ்கா சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியது.
பேருந்து மீது மோதிய வேகத்தில், சாலையோரத்தில் இருந்த தேநீர் விடுதி மீதும் லாரி மோதியது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில், பேருந்தில் இருந்த ஒருவரும், தேநீர் விடுதியில் இருந்த மூவரும் உயிரிழந்தனர்; மேலும், 13 பேர் காயமடைந்ததில், இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள், காவல் கண்காணிப்பாளர் உள்பட காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.