முகப்பு
இந்தியா

மதம் மாறி திருமணம்: மகள் ஆணவக் கொலை!

மதம் மாறி மகள் திருமணம் செய்ததால் தந்தையின் வெறிச்செயல்..

Updated On : 24 ஆகஸ்ட், 2024 at 4:48 PM
ஆணவக் கொலை
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் மதம் மாறி திருமணம் செய்ததால் மகளைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரூல்(30) இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லீம் நபரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தனியாக வாழ்ந்த வந்த னர் தம்பதியர்கள். இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரக்ஷா பந்தன் அன்று தன் தந்தையின் வீட்டிற்கு பாரூல் வந்துள்ளார்.

Advertisement

மகளை கண்டதும் சுரேந்தர் கடும் கோபமடைந்தார். அப்போதும் மதம் மாறி திருமணம் செய்ததைச் சொல்லி பிரச்னை செய்துள்ளார். பேச்சு முற்றிய நிலையில் சுரேந்திர சிங் தாக்கூர் தனது மகளைக் கோடாரியால் அடித்துக் கொன்றுள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பாரூலின் தாய் கொடுத்த புகாரின்பேரில், சுரேந்திர சிங் மீது எப்ஃஐஆர் பதிவு செய்து தந்தை கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.