இந்தியா

மிகப்பெரிய முடிவை எடுத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி: ஏக்நாத் ஷிண்டே!

இரண்டரை ஆண்டுகள் ஆட்சியமைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

DIN

நாங்கள் இவ்வளவு பெரிய முடிவை எடுத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று சிவசேனை தலைவர்(ஷிண்டே அணி) ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, இன்று காலை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மகாராஷ்டிர முதல்வராக (சட்டப்பேரவை பாஜக தலைவராக) தேவேந்திர ஃபட்னவீஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் ,கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாருடன் சென்று, மும்பையில் உள்ள ராஜ்பவனில் மகாராஷ்டிர ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

இரண்டரை ஆண்டுகள் ஆட்சியமைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த 2.5 ஆண்டுகளில் மகாயுதி கூட்டணியில் உள்ள மூவரும் செய்த அரசுப் பணிகள் குறிப்பிடத்தகுந்தவை. இவை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. நாங்கள் இவ்வளவு பெரிய முடிவை எடுத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று பேசினார்.

மகாராஷ்டிர முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் நாளை(டிச. 8) பதவியேற்கிறார். துணை முதல்வர் பதவி ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜீத் பவாருக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விட்டாச்சு லீவு... அனுஷ்கா கௌசிக்!

உன்னைத் தேடி வருவேன்... நமீதா பிரமோத்!

பறக்கும்... நியதி பட்னானி!

வெள்ளை மாளிகையில் புதிய கட்டுப்பாடுகள்: முக்கிய பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

மறுவெளியீட்டுக்குத் தயாராகும் தேவர் மகன்!

SCROLL FOR NEXT