வாயில் சுவரில் ஏறி எம்பிக்கள் போராட்டம் PTI
இந்தியா

நாடாளுமன்ற வாயில் சுவரில் ஏறி எம்பிக்கள் போராட்டம்!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக எம்பிக்கள் போராட்டம்...

DIN

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் சுவரின் மீது ஏறி எதிர்க்கட்சி எம்பிக்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை தெரிவித்ததாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமித் ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நீல நிற ஆடை அணிந்து, அம்பேதகர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாகச் சென்றனர்.

பேரணி மகா திவாரை அடைந்தவுடன் நுழைவு வாயில் சுவரின் மீது ஏறி சில எம்பிக்கள் அமித் ஷாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பதவி விலகவும் வலியுறுத்தி அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால், அவை நடவடிக்கைகள் முடங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT