லடாக்கில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலை படம் | எக்ஸ்
இந்தியா

லடாக்கில் சிவாஜி சிலையா? பெரும் சர்ச்சை!

லடாக்கில் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்ட சம்பவம் உள்ளூர் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

லடாக்கில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்ட சம்பவம் உள்ளூர் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.

லடாக்கின் லேவைத் தளமாகக் கொண்ட ‘14 காா்ப்ஸ்’ ராணுவப் படைப் பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹிதேஷ் பல்லா கடந்த வியாழக்கிழமை (டிச. 26) இந்த சிலையை திறந்து வைத்தாா்.

லடாக்கில் சிவாஜி சிலை திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே உள்ளூர் மக்களிடையே இது தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. லடாக்கின் பாரம்பரியம், சூழலியல் மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துகளைக் கேட்காமல் சிலை நிறுவப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாராட்டிய யூனிட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் அளித்த நிதியின் மூலம், அந்த யூனிட் அமைந்துள்ள பகுதியிலேயே சிவாஜி சிலை நிறுவப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், சிலை நிறுவ இந்த இடம் சரியானதா என்ற கேள்வியையும் சிலர் முன்வைக்கின்றனர்.

லடாக் கவுன்சிலர் கோன்சோக் ஸ்டான்ஸின் சிவாஜி சிலை தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,,

பாங்காங்கில் நிறுவப்பட்டுள்ள சிலை குறித்து உள்ளூர்வாசியாக குரல் எழுப்புகிறேன். உள்ளூர் மக்களின் கருத்துகளைக் கேட்காமல் சிவாஜி நிலை எழுப்பப்பட்டுள்ளது. சிலை வைக்கப்பட்டதில் லடாக்கின் தனித்துவமான கலாசாரத்துக்கும் சூழலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? இயற்கையை பிரதிபலிக்கும் வகையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

லடாக்கிற்கு அருகிலுள்ள கார்கில் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் ஆர்வலர் சஜ்ஜாத் கார்கிலி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

லடாக்கில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி சிலை, லடாக்குடன் வரலாற்று ரீதியாகவோ கலாசார ரீதியாகவோ தொடர்பற்றதாக உள்ளது. சத்ரபதி சிவாஜியின் பெருமைகளை நாங்கள் மதிக்கிறோம். எனினும் பொருத்தமற்ற இடத்தில் கலாசார சின்னங்கள் புகுத்தப்பட்டுள்ளது.

க்ரீ சுல்தான் சோ அல்லது அலி ஷேர் கான் அஞ்சன் மற்றும் சீங்கே நம்க்யால் போன்ற உள்ளூர் வரலாற்று நபர்களை கௌரவிக்கும் வகையில் சிலைகளை நிறுவுவதை நாங்கள் பாராட்டுவோம். இருப்பினும், கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, இவை கூட பாங்காங் போன்ற சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்கப் பகுதிகளில் வைக்கப்படக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாங்காங் பகுதியில் சிலை வைக்க பனிமலைகள் மீதான போரில் சிறப்பாக செயல்பட்ட ஜெனரல் ஜோராவர் சிங் (1784 - 1841) பொருத்தமான நபர் என கர்னல் சஞ்சய் பாண்டே முன்மொழிந்திருந்தார். 180 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணில் இருந்து சண்டையிட்ட நபர். திபெத்தில் நடந்த போரின்போது அவர் உயிரிழந்ததால், லே கோட்டையானது. ஜோராவர் கோட்டை என்றே அழைக்கப்படுகிறது. அவரின் சிலை இங்கு பொருத்தமாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ஒப்பந்தம் ரத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT