முகப்பு
இந்தியா

தில்லியில் 'மிகவும் மோசம்' பிரிவில் காற்றின் தரம்!

தலைநகரில் மிகவும் மோசம் பிரிவில் காற்றின் தரம் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரத் தகவல்கள் தெரிவித்துள்ளது.

Updated On : 16 பிப்ரவரி, 2024 at 7:13 AM
பகிர்:

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி,

தில்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 7.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது சராசரியை விட நான்கு புள்ளிகள் குறைவாகப் பதிவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வரை 6 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி, குறைந்தபட்ச வெப்பநிலை 7 அல்லது 8 ஆகப் பதிவாகி இருந்தது. இன்று தெளிந்த நிலையில் வானம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமையான இன்று சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு "மிகவும் மோசம்" மற்றும் "மோசம்" பிரிவில் பதிவானது. ஆனந்த் விஹாரில் 365 புள்ளிகளாகவும், ஐஜிஐ விமான நிலையப் பகுதியில் 254 ஆகவும், ஐடிஓ இல் 251 ஆகவும் பதிவானது.

முழு கட்டுரையைப் படிக்க →