இந்தியா

ஆம்புலன்ஸுக்கு வழிவிடாவிட்டால் ரூ. 10,000 அபராதம்! எந்த நகரில்?

ஆம்புலன்ஸுக்கு வழிவிடாத வாகன ஓட்டிகளுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று குருகிராம் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

DIN

ஆம்புலன்ஸுக்கு வழிவிடாத வாகன ஓட்டிகளுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று குருகிராம் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

ஹரியாணா மாநிலம், குருகிராம் நகரில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி கூறியதாவது:

“மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 194இ கீழ் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ. 10,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மேலும், சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் வாயிலாக இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு உடனடியாக ஆன்லைன் மூலம் அபராத ரசீது அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் உடல் உறுப்புகள் அவசரமாக எடுத்துச் செல்லும் வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்வதற்கு காவல்துறையால் பச்சை வழித்தடம் அமைத்து தரப்படுகிறது.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: உபரி நீர் மதகுகள் மூடல்!

பிரிட்டன் அமைச்சரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT