முகப்பு
இந்தியா

மாநிலங்களவைக்கு போட்டியின்றி சோனியா காந்தி தேர்வு!

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி சோனியா காந்தி தேர்வு.

Updated On : 20 பிப்ரவரி, 2024 at 4:18 PM
சோனியா காந்தி(கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2024 at 4:09 PM

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்த சோனியா காந்தி முதல்முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வாகியுள்ளார்.

தற்போது உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி, கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போதே மக்களவைக்கு போட்டியிடும் கடைசி தேர்தல் என்று அறிவித்திருந்தார்.

Advertisement

இந்த நிலையில், கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் ராஜஸ்தானில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வரும் பிப். 27-ஆம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.