ரத்தம் வழியும் மண்வெட்டியுடன் சரணடைந்த தந்தை!
உத்தரப் பிரதேசத்தில் மகள் மற்றும் அவரது காதலரை ஆணவக்கொலை செய்த தந்தை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்தியாரத்தம் வழியும் மண்வெட்டியுடன் சரணடைந்த தந்தை!
உத்தரப் பிரதேசத்தில் மகள் மற்றும் அவரது காதலரை ஆணவக்கொலை செய்த தந்தை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் பரோலி கிராமத்தில் மகள் மற்றும் அவரது காதலனை மண்வெட்டியில் தாக்கி கொடூரமாகக் கொன்ற தந்தை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
20 வயது நிரம்பிய மகள் நீத்து மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த சச்சின் ஆகியோர் 2 வருடங்களாக காதலித்து வந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அவர்களது காதலுக்கு இரண்டு குடும்பம் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அவர்களைப் பிரிக்க குடும்பத்தினர் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. செவ்வாய் கிழமை அதிகாலையில் நீத்து மற்றும் சச்சின் நீத்துவின் வீட்டு வாசலில் அமர்ந்துகொண்டிருந்ததைப் பார்த்த குடும்பத்தினர் அவர்கள் இருவரையும் சராமாரியாகத் தாக்கியுள்ளனர்.
அதில் நீத்துவின் தந்தை மகேஷ் மண்வெட்டியால் இருவரையும் தாக்கியதில் அந்த ஜோடி பரிதாபமாக உயிரிழந்தது. இரத்தம் வழியும் மண்வெட்டியுடன் மகேஷ் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதையும் படிக்க: ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை, நிதிஷ் குமாருக்கு அழைப்பு!
சச்சினின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரின் உடலும் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.