கோப்புப்படம். 
இந்தியா

டிஎஸ்பி-யைக் கொன்ற ஆட்டோ ஓட்டுநர் கைது!

சண்டீகரில் டிஸ்பி-யை சுட்டுக்கொன்ற ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

DIN

சண்டீகரில் கடந்த டிசம்பர் 31 ஆம் நாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஜலாந்தர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

துணை காவல்துறைக் கண்காணிப்பாளர் தல்பீர் சிங் கடந்த திங்கள்கிழமை சாலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் சுவப்பன் ஷர்மா, 'விஜயகுமாரின் ஆட்டோவில் சென்ற டிஸ்பி தல்பீர் சிங், தனது கிராமம் வரை செல்லுமாறு கூறியுள்ளார்.

அவ்வளவு தூரம் செல்லமுடியாது என ஆட்டோ ஓட்டுநர் கூற, இதனால் இருவருக்குமிடையே கைக்கலப்பு ஆகியுள்ளது. இந்த சண்டையில் அவரது துப்பாக்கியால் அவரை ஆட்டோ ஓட்டுநர் சுட்டுக்கொன்றுள்ளார்' எனக்கூறியுள்ளார். 

இதில் தல்பீர் சிங்கின் வலது கண்ணில் குண்டு பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் போதைப்பொருள்களுக்கு அடிமையானவர் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

SCROLL FOR NEXT