காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே 
இந்தியா

10 ஆண்டுகால ஆட்சியின் தோல்வியை பாஜக மறைக்கிறது!: மல்லிகார்ஜூன் கார்கே

பத்து ஆண்டுகால ஆட்சியில் தோல்வியடைந்திருப்பதை பாஜக மறைக்க முயல்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 

DIN

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மல்லிகார்ஜூன் கார்கே, பாஜக தனது பத்து ஆண்டுகால ஆட்சியில் அடைந்த தோல்வியை மறைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

'மக்களின் உணர்வுகளைத் தூண்டும் பிரச்னைகளை எழுப்பி அது அனைத்திலும் காங்கிரஸை சம்பந்தப்படுத்த பாஜக முயன்றுவருகிறது. அதன் மூலம் தனது பத்து ஆண்டுகால ஆட்சியில் தோல்வியடைந்ததை மறைக்க முயல்கிறது' எனக் கூறியுள்ளார். 

மேலும், 'வேற்றுமைகளைத் தளர்த்தி, ஊடகங்களில் உள் பிரச்னைகளை எழுப்பாமல் ஒரு குழுவாக செயல்பட்டு கட்சியின் வெற்றிக்காக உழைக்குமாறு' காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே அனைவரிடமும் கூறியுள்ளார். 

'ஒன்றாக செயல்பட்டு அவர்களின் பொய்களுக்கும், வஞ்சகங்களுக்கும், தவறுகளுக்கும்,  உரிய பதிலடியைக் கொடுக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைகை அணையில் பேரிடா் மீட்புப் பணி ஒத்திகை

காலிறுதியில் சிந்து, துருவ்/தனிஷா

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

பைக் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT