மிசோரத்தில் நிலநடுக்கம்!
மிசோரம் மாநிலம் லுங்லேயில் ரிக்டர் அளவுகோலில் 3.5 அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.
மிசோரம் மாநிலம் லுங்லேயில் ரிக்டர் அளவுகோலில் 3.5 அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.
இதுதொடா்பாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'மிசோரத்தில் வெள்ளிக்கிழமை காலை 7:18 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 3.5 அலகுகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டம்: சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிப்பு
நிலநடுக்கத்தால் எவ்வித உயிா்ச்சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டதற்கான உடனடி தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.