குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகம் நிராகரிப்பு: பாஜக தலைவர் பதில்!
குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகத்தின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது குறித்து அம்மாநில பாஜக தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகத்தின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது குறித்து அம்மாநில பாஜக தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடக அரசின் பரிந்துரை நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு பதிலாக, மத்திய அரசை அணுகி அணிவகுப்பில் இடம்பெறும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று அம்மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்தார்.
இதையும் படிக்க | மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட பஞ்சாப் அணிவகுப்பு மாநிலம் முழுவதும் வலம்வரும்: பகவந்த் மான் அறிவிப்பு!
Advertisement
Advertisement
செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய விஜயேந்திரா, “குடியரசு தின அணிவகுப்பில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக கர்நாடகம் பங்கேற்று வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் இந்த அணிவகுப்பில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்த முறை மற்ற மாநிலங்களுக்கு வாய்ப்பு தருவதற்காக கர்நாடகத்தின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.
கடந்த ஆண்டும் கர்நாடகத்தின் பரிந்துரை முதலில் நிராகரிக்கப்பட்டது. அப்போதைய பாஜக அரசு உடனடியாக தில்லிக்கு சென்று மத்திய அரசிடம் பேசி அணிவகுப்பில் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்தது.
ஆனால் தற்போதைய மாநில அரசு அதைச் செய்ய விரும்பவில்லை. பரிந்துரை நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் கிடைத்ததும் அதனை அரசியலாக்குவதற்கு பதிலாக, உடனடியாக மத்திய அரசை அணுகி பேசியிருக்க வேண்டும்.” என்று கூறினார்.
இதையும் படிக்க | காதல் திருமணம் செய்த மகளை குழந்தையுடன் கொன்ற குடும்பத்தினர்!
இதேபோல பஞ்சாப் மாநில அரசின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் சிங் “மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட குடியரசு தினத்திற்கான பஞ்சாப் அணிவகுப்பானது மாநிலம் முழுவதும் வலம்வரும்” என்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.