முகப்பு
இந்தியா

பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம்: மக்களவை எம்.பி.

எங்கள் கட்சித் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம் என மக்களவை எம்.பி. பத்ருதீன் அஜ்மல் தெரிவித்துள்ளார்.  

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:21 PM
மக்களவை எம்.பி. பத்ருதீன் அஜ்மல்
பகிர்:

மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்களின் ஆதரவு இன்றி பாஜக-வால் ஆட்சியமைக்க முடியாது என அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சித் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான பத்ருதீன் அஜ்மல் தெரிவித்துள்ளார். 

கடந்த செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 'மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வாட் ஆகியோர் முஸ்லிம் பகுதிகளுக்கும் மசூதிகளுக்கும் நாம் செல்ல வேண்டும் எனக் கூறுகிறார்கள்.

10% முஸ்லிம் ஓட்டுகளையாவது நாம் பெறவேண்டும் எனக் கூறுகிறார்கள்' எனத் தெரிவித்துள்ளார். மேலும், 'நாங்கள் எங்களது கட்சித் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக-விற்கு வாக்களிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். ஒரு ஓட்டு கூட பாஜக-விற்கு செல்லக் கூடாது என்ற முடிவில் உள்ளோம்' எனக்கூறியுள்ளார். 

கடந்த நவம்பரில் பாஜக-விற்கு எதிராக 11 இடங்களை காங்கிரஸுக்கு வழங்கியிருப்பதாக அஜ்மல் கூறினார். மேலும் அஸ்ஸாமில் மூன்று இடங்களில் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.பாஜக-வை எதிர்க்க ஏஐயூடிஎஃப் இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாக அவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →