இந்தியா

அமலாக்கத்துறை சம்மனை 4-வது முறையாக நிராகரித்த கேஜரிவால்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நான்காவது முறையாக அமலாக்கத்துறையின் சம்மனை நிராகரித்துள்ளார்.

DIN


தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நான்காவது முறையாக அமலாக்கத்துறையின் சம்மனை நிராகரித்துள்ளார்.

தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடா்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கெனவே மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 

அந்த சம்மனை நிராகரித்த கேஜரிவால், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டி நேரில் ஆஜராகவில்லை.

தொடர்ந்து, அரவிந்த் கேஜரிவாலுக்கு நான்காவது முறையாக இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கேஜரிவால் இன்றும் ஆஜராகவில்லை. மக்களவை தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேஜரிவால் கோவா பயணம் மேற்கொள்கிறார். 

அமலாக்கத்துறையால் தனக்கு அனுப்பப்பட்ட சம்மன் சட்டவிரோதமானது என கேஜரிவால் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளர்ந்த நிலா... மடோனா செபாஸ்டியன்!

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

SCROLL FOR NEXT