பாபுலால் கட்டாரா 
இந்தியா

ராஜஸ்தான் அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் இடைநீக்கம்!

ராஜஸ்தான் அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினரை அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இடைநீக்கம் செய்துள்ளார்.

DIN

ராஜஸ்தான் அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினரை அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இடைநீக்கம் செய்துள்ளார்.

வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாபுலால் கட்டாராவை அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். 

ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 317(2)-ன் படி வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ராஜஸ்தான் அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாபுலால் கட்டாராவை இடைநீக்கம் செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தவறான நடத்தையின் காரணமாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற கிரேடு-2 ஆசிரியர்கள் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழுவால் பாபுலால் கட்டாரா கடந்த 2023 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

பின்பு, இதே வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பம்மெட்டு மலைச் சாலையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்

சாலையில் தேங்கி வீணாகும் குடிநீா்

விவசாயியைத் தாக்கியவா் மீது வழக்கு

சராசரி மழையளவு 63 சதவீதம் வீழ்ச்சி: காரீப் பருவ சாகுபடி பரப்பு பாதிப்பு!

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT